யாரும் அற்ற அனாதையாக இறந்த பிரபல நடிகை..!! இப்படியொரு கொடூர நிலைமையா..?


1980ல் ஆச்சி மனோரமாவுக்கு நிகராக காமெடியில் கொடி கட்டி பறந்தவர் நடிகை காந்திமதி. மனோரமாவை போலவே இவரும் நாடகத்தில் இருந்து பட்டை தீட்டப்பட்டு சினிமா உலகுக்கு வந்தவர்.

சுருளிராஜனுடன் இவர் ஜோடி போட்டு நடித்த படங்கள் அனைத்துமே பட்டையை கிளப்பும் ரகம்.

அதிலும் சுருளிராஜனுடன் சேர்ந்து நடித்த மாந்தோப்பு கிளியே என்னும் படம் இவரது நகைச்சுவைக்காகவே வெள்ளி விழா கொண்டாடியவை. இவருக்கு பணமும், புகழும் கொட்டியது.

திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவினர்களை நம்பினார். அவர்கள் தனக்கு கடைசி வரை கொடுப்பார்கள் என்று நம்பினார். ஆனால் இங்குதான் விதி விளையாடியது.


இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். வயதானதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு திடீரென இறந்து போனார்.

சில நடிகைகள் தனக்கு என குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தி கொள்வதில்லை. உறவினர்கள் குழந்தைகளை தன் குழந்தையை போல பாவித்து வளர்த்து வருகிறார்கள். கடைசியில் அவர்கள் தனது தாய், தந்தை சொந்தம் என போய் விடுகிறார்கள்.

இவர்கள் அனாதையாகி விடுகிறார்கள். அதுபோலத்தான் காந்திமதியும் கடைசி காலத்தில் உதவிக்கு ஆள் இல்லாமல் அழுது அழுதே செத்து போனார். இது தான் சினிமா வாழ்க்கை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி