தாத்தா வயதிலும் அவரால் முடியும்… இந்த வயசுல எங்களுக்கு முடியாத..? யாரை சொல்கிறார் தெரியுமா..?


நடிகர் 70 வயது தாத்தாவாகவே ஆனாலும் அவருக்காக கதை எழுதுகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு அப்படி இல்லையே என்று ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார். ஹீரோயினுக்கு திருமணமானால் அவரது மார்க்கெட் பாதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் இது குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரீமா கல்லிங்கல் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,பெண்கள் சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்பது அதிகரித்துள்ளது. ஒரு நடிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்ட் பகுதிக்கு சென்று பார்த்தால் தெரியும்.


நாங்கள் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தியிருப்பார்கள். சம்பளம் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் எங்களுக்கு கிடைக்கிறது. கேட்டால் சாட்டிலைட் உரிமம் உள்ளிட்ட விஷயங்களில் எங்களுக்கு மதிப்பே இல்லை என்கிறார்கள்.

கதாபாத்திரம் ஒரு நடிகர் 20 முதல் 70 வயதாக இருந்தாலும், திருமணமாகியிருந்தாலும் சரி ஆகவில்லை என்றாலும் சரி, குழந்தைகள் ஏன் பேரக் குழந்தைகள் இருந்தாலும் சரி அவர்களுக்காக கதை எழுதுகிறார்கள். அவரின் கெரியரை உயர்த்த படம் எடுக்கிறார்கள். அதற்காக ஒரு கலைஞராக சந்தோஷப்படுகிறேன்.


ஆனால் ஒரு நடிகையாக சந்தோஷப்பட முடியவில்லை. படம் ஒரு நடிகை தனது சொந்த வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரின் சினிமா வாழ்க்கையை பாதிக்கிறது. திருமணமானால், விவாகரத்தானால், குழந்தை பெற்றால் என்று என்ன செய்தாலும் கெரியரை பாதிக்கிறது என்றார் ரீமா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி