காதல், திருமணம் இரண்டும் கசப்பான அனுபவம்..!! அதற்காக இப்படியா பண்ணுவீங்க….!!!


பிரபல தொகுப்பாளினிகளில் ரசிகர்கள் பலருக்கு மிகவும் ஃபேவரிட் என்றால் அது திவ்யதர்ஷினி என்கிற டிடி தான். விஜய் டி.வி-யில் டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமாகப் பார்ப்பார்கள்.

இந்த நிலையில் தொகுப்பாளினி டிடி முதன்முதலாக தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி-யின் அம்மாவுக்கு இன்று பிறந்தநாள். அதனால், தனது அம்மாவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் டிடி.


விவாகர்த்து கேட்ட டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது குறும்புத்தனத்தால் ரசிகர்களையும், பிரபலங்களையும் ஈர்த்த டிடி சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் டிடி விவாகரத்துக்கு விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

டிவி நிகழ்ச்சிகளில் கவனம் திருமணத்தால் பல மாதங்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவந்த டிடி இப்போது விஜய் டி.வி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். திருமண உறவு கசப்பாக மாறியதை அடுத்து, தற்போது பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.


ப்ரியதர்ஷினி திவ்யதர்ஷினியின் அக்கா, ப்ரியதர்ஷினி சன் டி.வி-யில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் மூலமாகத்தான் பேச்சாற்றல் மிகுந்த டிடி தொலைக்காட்சி உலகுக்கு அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி