ஒரே படத்தில் உச்சத்துக்கு செல்ல ஆசைப்படும் இளம் நடிகை..!! தெறித்து ஓடும் இயக்குனர்கள்..!!


டிவி நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட்டில் நடிகைக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் அம்மணி தனது சம்பளத்தை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 60 லட்சமாக உயர்த்திவிட்டார். இருப்பினும் அவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் அவர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

வர வர கோலிவுட்டில் எல்லோருமே சர்ச்சை நடிகை போன்று ஆக ஆசைப்படுகிறார்கள். சர்ச்சை நடிகை கவர்ச்சி, துக்கடா கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தவர். வளர்ந்து தனக்கு என ஒரு பெயர் எடுத்த பிறகே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி