பெங்களூருக்கு பறந்த நடிகர் ரஜினிகாந்த்.. விஷயம் இதுதான்

லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றுள்ளார். அதாவது, தன் நெருங்கிய நண்பரான மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் அபிஷேக் அம்பரீஷ் திருமணம் இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!