பிரபல நடிகையின் புதிய புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்: எதனால் தெரியுமா?


நடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். இதில் பலர் தங்களது எண்ணப்படி அழகு பதுமையாக மாறுகின்றனர். ஒரு சிலருக்கு அலர்ஜி போன்றவற்றால் பிரச்னை ஏற்படுகிறது.


கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிவேதா தாமஸ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அழகான முக தோற்றம், கச்சிதமான உடற்கட்டு என ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் நேற்று தனது இணைய தள பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டார்.


அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர். வழக்கமான முகவசீகரம் குறைந்து காணப்பட்ட நிவேதா தாமஸின் புதிய தோற்றம் தங்களை அப்செட் செய்திருப்பதாகவும், அழகான முகதோற்றத்தை அறுவை சிகிச்சை செய்து மாற்ற வேண்டாம் என்றும் ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். நிவேதா மேக்அப் அணியாத நேரத்தில் இப்படத்தை எடுத்ததால்தான் அவரது தோற்றம் இதுபோல் இருப்பதாக புகைப்பட நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!