14 வருட வாழ்க்கை போராட்டம்.. இன்று இவரின் நிலை…!! என்ன ஆனார் தெரியுமா..?


யோகி பாபு .. இன்று இவர் திரையில் தோன்றினாலே பலத்த கைத்தட்டுகள் சிரிப்பலைகள்..உற்சாகம் அடுத்து நம்மை சிரிக்கவைக்க போகிறார் என்று ஒரு எதிர்பார்ப்பு அஜீத், விஜய், ரஜினி ஷாருக்கான் வரை இவரின் நண்பர்கள். இவர்களின் செல்லப்பிள்ளை யோகிபாபு. ஒரு கதை யோசிக்கும் போதே யோகி பாபு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

குறிப்பாக அஜீத்தின் செல்லப்பிள்ளை இவர். எல்லாம் சரி இந்த நிலையை இவர் அடைய யோகிபாபு பட்ட கஷ்டம் என்ன தெரியுமா? பட்ட அவமானங்கள் தெரியுமா..? சிந்திய கண்ணீர் தெரியுமா..?இதோ பரட்டை போல சுருள் முடி பார்க்கவே பயங்கரமான தோற்றம். வீதியில் இவர் நடந்தால் பயந்து ஒதுங்கிச் செல்லும் பெண்கள். பயந்து அலறும் குழந்தைகள். இது தான் யோகிபாபு.


எல்லோரும் தன்னை ஒதுக்குகிறார்களே என்கிற வலி ஒவ்வொரு நாளும் இவரை பாடாய் படுத்தியது. தனது நண்பருடன் தனியார் தொலைகாட்சி காமெடி நிகழ்ச்சிக்கு துணைக்கு செல்வார். ஒரு ஓரமாக பயந்துபோய் நின்று ஆயிரம் ஏக்கங்களோடு படப்பிடிப்பை பார்ப்பார். மாலை ஆனதும் கிளம்பி நண்பருடன் அறைக்கு போய்விடுவார். இதுதான் ஆரம்பகாலம் நடிக்க வாய்ப்புக் கேட்பதற்கே கூச்சம்.

ஒருநாள் அவர் அந்த நிகழ்ச்சி இயக்குனரின் பார்வையில் பட எல்லோருக்கும் பயத்தை ஏற்படுத்திய இவரது தோற்றம் அவருக்கு காமெடியாகத் தோன்றியது தொலைகாட்சி நகைசுவை நிகழ்ச்சிகளில் நடிக்க வைத்தார் இயக்குனர். இவரது வித்தியாசமான தோற்றம் கண்டு மக்கள் சிரிக்க ஆரம்பிக்க.

கூனிக் குறுகி நடந்த யோகிபாபு கொஞ்சம் நிமிர்ந்தார். அதன் பிறகு மிகப் போராடி’ யோகி’ படத்தில் தலை காட்டினார்.


அதன் பிறகு பண்ணி மூஞ்சி வாயன் என்கிற கேரக்டர் இவரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தது அதன் பின் இவர் வாழ்கையில் ..! பெரிய ஹீரோக்கள் இவரை தேடி அழைத்தனர். அரவணைத்தனர்.

வட இந்தியா வரை இவரின் புகழ் பரவியது.இன்று இவர் இல்லாத படங்களே இல்லை. இரவு பகலாக நடிக்கிறார். ஒரு பந்தா இல்லை..ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு, கேரவன் என எந்தப் பந்தாவும் பகட்டும் இல்லாமல் சாதாரண மனிதனாகவே உலா வருவது ஆச்சரியம்.கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது.

நாசுக்காக மறுத்து விட்டு தனக்கான பாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வேக நடை போடுகிறார் யோகிபாபு. உழைப்பும், அர்பணிப்பும் என்றாவது பெரிய இடத்தில உட்காரவைக்கும் என்பதற்கு யோகிபாபு ஒரு சாட்சி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி