பையா 2-ம் பாகத்தில்… ஆர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே? by priya | @ | February 24, 2023 9:17 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்த ‘பையா’ படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதனை லிங்குசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்து பட வேலைகளை தொடங்கி உள்ளார். பையா 2 படத்தில் கார்த்திக்கு பதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. இதனை ஜான்வி கபூரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனிகபூர் மறுத்தார். பையா 2 உள்பட எந்த தமிழ் படத்திலும் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகவில்லை என்று கூறினார். இதையடுத்து பையா 2 படத்தில் நாயகியாக நடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் பையா 2 படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். முகமூடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பையா 2 படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…