டிரைவரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட விஜய் – வைரலாகும் வீடியோ..!

தெறி, மெர்சல்’ படங்களுக்கு பிறகு மீண்டும் ‘தளபதி’ விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய்யின் கேரியரில் 63-வது படமாம்.

இதில் விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை இந்த ஆண்டு (2019) தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று தனது டிரைவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.