ரூ.264 கோடி பணமோசடி புகார்.. நடிகை கீர்த்தி வர்மாவிடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை..

இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி வர்மா. கீர்த்தி வர்மா வருமான வரித்துறையில் அதிகாரியாக பணி புரிந்தவர். பின்னர் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவில் நடிக்க சென்றார். முதலில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதன்மூலம் பிரபலம் ஆன கீர்த்தி வர்மா மீது இப்போது வருமான வரித்துறையினர் மோசடி புகார் கூறியுள்ளனர்.

மும்பை வருமான வரித்துறையில் கணக்குகளை தாக்கல் செய்து வரிகழிவு பெறுவதில் ரூ.264 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்க துறையினரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் வருமான வரித்துறையில் பணிபுரிந்த போது குற்றவாளிகளுக்கு துணை போனதாக கூறப்பட்டது.

மேலும் அதில் மும்பை தொழில் அதிபர் பூசன் பாட்டீல் என்பவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி பணம் நடிகை கீர்த்தி வர்மா கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது நடிகை கீர்த்தி வர்மா மீதான சந்தேகத்தை அதிகரித்தது. இதையடுத்து நடிகை கீர்த்தி வர்மாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரும் புகார் தொடர்பாக அமலாக்க துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக நடிகை கீர்த்தி வர்மா கூறும்போது, தொழில் அதிபர் பூசன் பாட்டீலுடன் ஆரம்பத்தில் தொடர்பில் இருந்தேன். அவர் நான் பங்கேற்ற நடன நிகழ்ச்சிக்காகவே பணம் கொடுத்தார். அவர் பண மோசடி புகாரில் சிக்கி இருப்பது தெரியவந்ததும் அவருடான தொடர்பை கைவிட்டுவிட்டேன், என்றார்.








https://youtube.com/watch?v=XwzhJhEHtyI
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!