விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் புதிய அப்டேட் by priya | @ | February 10, 2023 9:26 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு விஜய் ஆண்டனி தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ‘பணம் உலகை காலி பண்ணிடும்’ என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…