கடைசி காதல் கதை – விமர்சனம்

நண்பர்களுடன் ஜாலியாக வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார் ஆகாஷ் பிரேம்குமார். அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் காதலி கிடைக்க அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆகாஷுக்கு தாமதமாக காதலி கிடைக்க, ஆனால் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார். தன்னை தொடக்கூடாது, கட்டிப்பிடிக்க கூடாது என்றெல்லாம் காதலி தடை போட, அதனை மறுக்காமல் அவரும் ஏற்கிறார்.   நண்பர்கள் தூண்டுதலால் அவர் காதலியிடம் தடையை உடைத்து அத்துமீறுகிறார் ஆகாஷ்.

இதனால் கோபமடையும் காதலி அவருடனான காதலை முறித்து விலகுகிறார். இவரின் செயலால் வேறு ஒரு நபரை மணக்கவும் முடிவு செய்கிறார். இதனால் மனவுலைச்சலுக்கு உள்ளாகும் ஆகாஷுக்கு விபரீத யோசனைகள் தோன்றுகிறது. அந்த விபரீத முடிவை நண்பர்களை வைத்து செயல்படுத்த முயற்சிக்கிறார். இறுதியில் அந்த விபரீத் முடிவால் அவருக்கு என்ன நேர்ந்தது? அவர் காதலியை அடைந்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.  

காதல், அன்பு, கோவம், விரக்தி என பல வித உணர்வுகளை நடிப்பில் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் ஆகாஷ் பிரேம்குமார். காதல் வயப்படும்போதும், உணர்ச்சிவசப்படும்போதும் மிகையில்லாத இயல்பான நடிப்பை வழங்கி கதாபாத்திரத்தோடு வாழ்ந்து இருக்கிறார். தன்னுடைய யோசனைகளை நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வித்யாசம். நாயகி ஏனாக்‌ஷி தொடாமலே காதல் செய்ய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.  

நண்பர்களாக வரும் புகழ், ஆஷிக், நோபல், காவல் துறை அதிகாரியாக வரும் சாம்ஸ், மைம் கோபி, பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, ஸ்வப்னா, கிருத்திகா, மனநல டாக்டராக வரும் ஆர்.கே.வி. உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.   ஒளிப்பதிவாளர் சிவசுந்தர் அவர் பணியை சரியாக செய்துள்ளார். சேத்தன் கிருஷ்ணா இசையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.   மொத்தத்தில் கடைசி காதல் கதை – பார்க்கலாம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!