எச். வினோத்தைத் தொடர்ந்து சபரிமலை யாத்திரை செய்த விக்னேஷ் சிவன்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் எச். வினோத் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!