ராங்கி – விமர்சனம்

துணிச்சல் நிறைந்த பத்திரிகையாளரான திரிஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரின் துணிச்சல் காரணமாக திரிஷாவின் குடும்பம் இவரை விட்டு கொஞ்சம் தள்ளியை இருக்கின்றனர்.

ஒரு நாள் திரிஷாவின் அண்ணனுக்கு அவரது மகள் குறித்து ஆபாசமான வீடியோ ஒன்று வருகிறது. இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவர் திரிஷாவிடம் கூறுகிறார். இதனை திரிஷா விசாரிக்க ஆரம்பிக்கவே பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. ஒரு பெண் பேஸ்புக்கில் போலி கணக்கை உபயோகித்து ஆண்களுடன் பேசி வருகிறார். அந்த கணக்கின் ஃப்ரோபைல் பிச்சரில் திரிஷாவின் தங்கையின் புகைப்படம் இருக்கிறது.

இதனை கண்டுபிடித்த திரிஷா அந்த கணக்கில் பேசத் தொடங்குகிறார் பிரச்சினையை முடிக்கலாம் என்று நினைக்கும் போது பிரச்சினை ஒரு தீவிரவாதியின் மூலம் வெளிநாடு வரை நீள்கிறது. இறுதியில் திரிஷா தன் தங்கையை காப்பாற்றினாரா? இந்த பிரச்சினையில் இருந்து அவர் எப்படி வெளியேறினார்? அந்த தீவிரவாதி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பத்திரிகையாளரான திரிஷா திமிரான உடல்மொழியில், அடங்க மறுக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் முழுமையான தனது நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைத்துள்ளார். அண்ணன் மகளாக வரும் அனஸ்வரா தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

அரசியல், தொழில் நுட்பம், காதல் என பலவற்றை சரியான விதத்தில் பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குனர் எம்.சரவணன். வழக்கமான காதல் காட்சிகள் இல்லை என்றாலும் அவற்றை வசனத்தில் கடத்தியிருக்கிறார் இயக்குனர். சி. சத்யா பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. மொத்தத்தில் ராங்கி – ரசனை

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!