படம் இயக்குவதில் கவனம் செலுத்தும் விஷால் by priya | @ | December 20, 2022 3:52 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest ‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.தற்போது விஷால் அளித்துள்ள பேட்டியில், ”மார்க் ஆண்டனி படத்தை முடித்து விட்டு துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து நானே டைரக்டு செய்ய இருக்கிறேன். தொடர்ந்து விலங்குகளை வைத்து இரு படம் இயக்க உள்ளேன். இது எனது கனவு படம். ஒரு ரசிகனாக விஜய்யை எப்படி பார்க்க விரும்புகிறேனோ அப்படி ஒரு கதையை எழுதுகிறேன். விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கப்போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை. அரசியல் என்பது மக்கள் பணி. அதை இப்போதும் செய்து வருகிறேன்.எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன். திரைப்படங்களை திருட்டு இணையதளத்தில் வெளியிடுவதை அரசு நினைத்தால் உடனே தடுக்க முடியும். சென்னையில் அனைத்து வசதிகள் கொண்ட திரைப்பட நகரை உருவாக்க அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைப்பேன். நான் நடித்துள்ள லத்தி படத்தில் போலீஸ்காரர்களின் பிரச்சினைகள், தந்தை, மகன் பாசம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருக்கும். சண்டை காட்சியில் எனக்கு அதிகம் அடிபட்டது. இந்த படத்தில் எனது நடிப்பு பேசப்படும்” என்றார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…