குத்துச்சண்டை வீராங்கனையாக மாறிய ரோஜா

சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் முதல் பரிசை வென்றன. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

அப்போது ரோஜா பேசியதாவது, ஆந்திராவில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என்றார். பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனை கண்டு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.








  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!