வெற்றிமாறனுடன் நான் இணையவுள்ளேன் – பிரபல ஒளிப்பதிவாளர் பதிவு

தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்.ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!