விஜய் தேவரகொண்டாவுடன் பிரேக் அப்பில் ஐஷ்வர்யா ராஜேஷ் – இதுவரை வெளிவராத தகவல்!

தெலுங்கு தமிழில் உருவாகும் பிரேக் அப் எனும் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.

இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க தெலுங்கு தமிழில் உருவாகும் பிரேக் அப் எனும் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். மேலும் தெலுங்கில் ஐஷ்வர்யா ராஜேஷ் அறிமுகமாகும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.