தமிழ் சினிமாவுக்கு இப்படியொரு சோதனையா..? கவலையில் விநியோகஸ்தர்கள்..!!


தமிழ் சினிமா பொறுத்த வரையில் வியாபாரம், படரீலீஸ், படங்கள் ஓடுமா, ஓடாதா என்பதனை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோக பகுதியாகும்.

வசூல் முக்கியத்துவம் உள்ள தியேட்டர், மால்கள் அதிகமாக உள்ள பகுதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில்தான்.

ஏதாவது படங்களின் ரீலீஸ் பஞ்சாயத்து, நிதி பற்றாக்குறை சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் எடுக்கப்படும் முடிவுகள் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரின் மேற்பார்வையில்தான் முடிவு எடுக்கப்படும்.

இத்தனை முக்கியத்துவம் மிக்க விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு பிரபல படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தமிழ் சினிமாவில் அதிகாரம்மிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பதவிக்கு ஞானவேல்ராஜா போட்டியிடுவது தமிழ் திரையுலகினர் அனைவரும் அவரை உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய தலைவர் அருள்பதி நீண்ட காலமாக இப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதின் மூலம் அதிகார மையமாக, ஆதிக்கம் செலுத்தி வந்த அன்பு செழியன் ஆதரவாளர் இவர்.

இதனால் முதல் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் இவரது ஒருதலைபட்சமான முடிவுகளால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற செயல்களுக்கு முடிவு கட்ட தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருக்கும் ஞானவேல்ராஜா தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தயாரிப்பாளர்களின் சிரமம் புரியாமல் தமிழ் சினிமாவில் நாட்டாமைத்தனம் செய்யும் போக்கை நிர்மூலமாக்கும் வகையில் சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் முடிவு இருக்கும் என்கிறார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும்.

தமிழ் சினிமாவில் அடுத்த தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!