பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இசையமைப்பாளர் தேவா!

“1986ஆம் ஆண்டு மனசுக்கேத்த மன்னாரு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன் படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.

காத்தடிக்குது காத்தடிக்குது… காசிமேடு காத்தடிக்குது… திருப்பதி ஏழுமலை வெங்கடேசா… கவலைப்படாதே சகோதாரா… உள்ளிட்டப் பல பாடல்களை இன்றும் பட்டித்தொட்டியெல்லாம் அவ்வப்போது கேட்க முடிகிறது. சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர் பாடிய ‘ஜித்து ஜில்லாடி’ பாடல் மிகவும் பிரபலமானது. இவர் கடைசியாக 2021இல் சில்லு வண்டுகள் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். அதில், வணக்கம்! இறுதியாக உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாளை நடக்கும் தேவா தேவா நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார். தேவாவின் பிறந்தநாளான நேற்று அவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளதால் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!