ஒன் வே – விமர்சனம்

விவசாயம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வரும் கதாநாயகன், அவருடைய தந்தை ஒருவரிடம் கடன் வாங்கி திரும்ப தர முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த கடனை திருப்பி தர போராடும் குடும்பத்திடம் கடனை கொடுத்தவர் மிரட்டல் விடுகிறார். கடன் கொடுக்க தவறினால் உன்னுடைய தங்கையை என்னிடம் அனுப்பிவிடு என்று தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசிவிடுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் நாயகன் தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்க அவர் ஒரு யோசனை சொல்கிறார். 

  கள்ளப் பாஸ்போர்ட்டில் வெளிநாடுக்கு சென்றுவிடு அங்கு முடிந்த அளவிற்கு பணத்தை சம்பாரித்து விஷயம் தெரிந்து மாட்டிக்கொண்டால் ஒரு வருடத்திலிருந்து 10 வருடம் வரை ஜெயில் தண்டனை அனுபவித்து பிறகு இந்தியா வந்து குடும்பத்திடம் சேர்ந்து விடு என்று கூற இந்த யோசனையை எடுத்துக் கொண்டு நாயகன் செல்கிறான். அங்கு என்ன ஆனது? அவரின் யோசனை பலித்ததா? கடனை எப்படி திருப்பி கொடுக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

  படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜேந்திர பாண்டியனின் நடிப்பில் உணர்வு இல்லை. எல்லா உணர்வுகளுக்கும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். அம்மாவாக நடித்திருக்கும் கோவை சரளா அவரின் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார். ஆரா அவரின் நடிப்பு எதார்த்தமாக அமைந்துள்ளது.  

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து கையாண்டிருப்பதற்கு இயக்குனர் எம்.எஸ்.சக்திவேலுக்கு பாராட்டுக்கள். இருந்தும் படத்தின் திரைக்கதையில் சுவாரசியமும் விறுவிறுப்பும் இல்லை. திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் காட்சிகளை பாராட்டும்படி அமைத்து கைத்தட்டல் பெறுகிறார்.   ஒளிப்பதிவாளர் முத்துகுமரன் அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். வித்யாசமான காட்சிகள் அமைக்கவில்லை என்றாலும் அவருடைய பணியை சரியாக முடித்துள்ளார். அஷ்வின் ஹெமந்த்தின் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் ஒன் வே – தடை. 


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!