எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டாங்களே..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


1950 மற்றும் 60-களில் தமிழ், தெலுங்கு பட உலகில் ஆதிக்கம் செலுத்தி முன்னணி கதாநாயகியாக இருந்தார் சாவித்திரி. இவருடைய வாழ்க்கை வரலாறு நடிகியர் திலகம் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகிறது. சாவித்திரியாக நடிக்க யாராலும் முடியாது, அவரது வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்று பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், தன்னால் முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.


இப்படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசன் வேடத்தில் மலையாள நடிகர் துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். பத்திரிகை நிருபராக சமந்தாவும் நடித்து வருகிறார்கள். சாவித்ரியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய கதாசிரியர் அலூரி சக்ரபாணி வேடத்தை பிரகாஷ்ராஜ் ஏற்கிறார். மேலும் இப்படத்தில் அனுஷ்கா, நடிகை பானுமதி வேடத்திலும், நாகசைதன்யா அவரது தாத்தா நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்திலும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். நக் அஸ்வின் டைரக்டு செய்கிறார்.


கீர்த்தி சுரேஷின் தோற்றம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. படக்குழுவினருக்கும் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றமும், ஜெமினிகணேசனாக நடிக்கும் துல்கர்சல்மான் தோற்றமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் தோற்றம் மிகவும் சிறப்பாக இருப்பதாக திரை பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பாராட்டி எழுதி வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி