23 வயது பெண்ணை திருமணம் செய்தேனா? நடிகர் பப்லு அளித்த விளக்கம்

நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. மலேசியாவில் தொழில் தொடங்க அந்த பெண் பப்லுவுக்கு உதவி புரிந்ததாகவும், பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும் பரவலாக பேசப்பட்டது. இதுபற்றி பப்லு விளக்கம் அளித்துள்ளார்.
‘திருமணம் செய்துகொண்டதாக பலர் போன் போட்டு கேட்கிறார்கள். திருமணம் செய்யப்போகிறேன், ஆனால் இப்போது இல்லை, அதுபற்றி யோசிக்கவில்லை.. என எத்தனை பேரிடம் விளக்கம் சொல்வது? என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை தனித்தனியாக வைக்க வேண்டும் என நினைப்பவன் நான்.

சினிமாகாரர்களுக்கு ஒரு கெட்ட பெயர் உள்ளது. புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டால்கூட மீடியாவில் வந்து சண்டை போடுகிறார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தப்பா பேசுவது என இருக்கிறார்கள். இதனால் எல்லா சினிமாகாரக்ளும் அப்படித்தான் என்ற பெயர் இருக்கிறது. நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் விடமாட்டேன் என்கிறார்கள். நான் எதாவது செய்தால் அதை வெளிப்படையாக செய்பவன். உங்கள் எல்லோருக்கும் தெரிந்து உங்கள் ஆசீர்வாதத்துடன்தான பண்ணுவேன். திருட்டுத்தனமாக எதுவும் செய்வதில்லை’ என்றார் பப்லு.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!