விக்ராந்த் ரோனா – விமர்சனம்

கிராமம் ஒன்றில் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாத சூழலில், புதிதாக அந்த ஊருக்கு வரும் காவல் துறை அதிகாரி கிச்சா சுதீப் இது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார்.

அந்த விசாரணையில் பல புதிய திருப்பங்களும், திடுக்கிடும் தகவல்களும் கிச்சா சுதிப்புக்கு கிடைக்கிறது. இறுதியில் இந்தக் கொலைகள் அமானுஷ்ய சக்தியால் நிகழ்கிறதா? தனி மனிதனால் நிகழ்கிறதா? கிச்சா சுதீப் இதை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

விக்ராந்த் ரோனாவாக கிச்சா சுதீப் நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல், எதற்கும் அஞ்சாத போலீஸ் அதிகாரியாக நடித்து கவனம் பெறுகிறார். உணர்ச்சிகளை பெரிய அளவில் வெளிக்காட்டாத கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரைத்தொடர்ந்து நிரூப் பண்டாரி சொல்லும் அளவிற்கு கச்சிதமாக நடித்து அசத்தி இருக்கிறார்.

நாயகி நீதா அசோக் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜாக்லின் ஃபெர்னான்டஸின் நடனமும், அவர் வரும் பாடலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறது. ரவிசங்கர் கௌடா, மதுசூததன் ராவ் உள்ளிட்ட பலரும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


அனுப் பண்டாரி இயக்கிய பான் இந்தியா முறையில் இப்படம் 3டியில் தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது. ஒரு சில காட்சிகள் மட்டுமே விஷூவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. முதல் பாதி திரைக்கதை எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை. எதை நோக்கி படம் பயணக்கிறது என்ற குழப்பம் நீள்வதால் படத்துடன் ஒன்றமுடியவில்லை.
x
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருட்டிலேயே படம் நகர்கிறது. இது பெரிய பலவீனம். கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சி கவனம் பெறுகிறது.

3டி தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வில்லியம் டேவிட்டின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பாராட்டுகள் கொடுக்கலாம். அஜனிஷ் லோக்நாத் இசையில், ‘ராரா ராக்கம்மா’ பாடல் திரையரங்கை தெறிக்கவிடுகிறது. பின்னணி இசையில் தேவையான திகில் உணர்வை கொடுத்து இருக்கிறார்.

மொத்தத்தில் ‘விக்ராந்த் ரோனா’ அதிக வியப்பு இல்லை.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!