பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


நட்சத்திர விழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள நடிகர் ஜெயம் ரவி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கலை விழா மலேசியாவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட ஏறத்தாழ தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஒட்டுமொத்தமாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள நடிகர் ஜெயம் ரவிக்கு, எதிர்பாராத விதமாக கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விழாவில் பங்கேற்க முடியாத ஜெயம் ரவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.