தமிழ் சினிமாவை கலக்கிய வெற்றி பட நாயகனின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..?


உலக நாயகன் கமலின் நல்ல நண்பர்கள் பட்டியலில் எப்போதுமே ரமேஷ் அரவிந்துக்கு தனி இடம் உண்டு. ஏனென்றால் கமலின் பெரும்பாலான படங்களில் ரமேஷ் அரவிந்த் நடித்து விடுவார். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே தமிழகத்தின் கும்பகோணம் ஆகும்.

பள்ளி படிப்பை இங்கு முடித்த இவர் பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். படிக்கும் போதே கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.

ஒரு முறை இவர் படித்த கல்லூரியில் கமலின் சலங்கை ஒலி படத்தின் வெற்றி விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியை ரமேஷ் அரவிந்த் தொகுத்து வழங்கினார்.

அப்போது கமலுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. பின்னர் கன்னட சேனலில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து மவுன கீதா என்ற கன்னட படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

பின்னர் பாலசந்தர் அறிமுகம் கிடைக்க அவரின் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின் கன்னட படத்தில் கமல் நடித்த வேடத்தில் நடித்தார்.


அதன்பிறகு தமிழில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.

இதில பாட்டு வாத்தியார், டூயட் போன்ற படங்கள் நல்ல பெயரை பெற்று கொடுத்தன. ஆனாலும் வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் கன்னடத்தில் தொடர்ந்து வாய்ப்பு வர ஆரம்பித்தன.

கன்னடத்தில் மட்டும் 90 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார். இடையில் அவ்வப்போது கமலின் படங்களில் தலைகாட்டி வந்தார். தமிழில் வாய்ப்புகள் இல்லை.

தற்போது இயக்குனர், தயாரிப்பாளராக உள்ளார். தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த உத்தம வில்லன் படத்தை இயக்கியது ரமேஷ் அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!