பிரபல நடன இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் சின்னா (69). இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான ‘தூரல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான இவர், அதன்பின் அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தைப் போல, செந்தூரப்பாண்டி, நேசம் மற்றும் முந்தானை முடிச்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் நடன இயக்குனர் சின்னா நேற்று (15.06.2022) உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியை அவரது மகளும் சின்னத்திரை நடிகையுமான ஜெனிஃபர் தனது சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். புவனேஸ்வரி, நாகலட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, அம்மன் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜெனிஃபர் என்பது குறிப்படித்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!