புதியதாக கமல்-ரஜினி ரசிகர்கள் இடையே முற்றிய சண்டை

நடிகர் கமல்ஹாசன் இந்த வருடத்தின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார், காரணம் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம். கடந்த ஜுன் 3ம் தேதி ரிலீஸ் ஆன இத்திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே விரைவில் படம் ரூ. 150 கோடியை எட்டிவுள்ளது. இப்படம் நல்ல வசூலை பெறட்டும் என சில நடிகர்களின் பட ரிலீஸை கூட தள்ளி வைத்துள்ளனர். அந்த அளவிற்கு விக்ரம் படத்தின் மேல் அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு உள்ளது

சில வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பராக ஓடிக் கொண்டிருப்பதால் அவரது ரசிகர்கள் நிறைய போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் அதிரடி
இப்படி கமல் ரசிகர்கள் கொண்டாட ரஜினி ரசிகர்களே பட அறிவிப்பு வருவதற்கே போஸ்டர்கள் ஒட்டி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் தான் எப்போதும் தலைவர், ரஜினி தான் ராஜா என்பது போல் வசனங்கள் எழுதியுள்ளனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!