அக்‌ஷய் குமாருக்கு வந்த புதிய சிக்கல்..

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்று திரைப்படமான ‘சாம்ராட் பிருத்விராஜ்’ தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஜூன் 3-ந் தேதி வெளியானது.

சந்திரபிரகாஷ் திவிவேதியால் இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ராஜபுத்திர மன்னரான பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கையைப் பற்றிய பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் அக்‌ஷய் குமார் பிருத்விராஜ் சௌஹானாக நடித்துள்ளார்,

அதே சமயம் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மனுஷி சில்லர் இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், சோனு சூட் மற்றும் மானவ் விஜ், அசுதோஷ் ராணா மற்றும் சாக்ஷி தன்வார் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இரண்டு மாநிலங்கள் வரி விலக்கு அளித்தது. இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி செலவில் உருவான ‘சாம்ராட் பிருத்விராஜ்’ திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ 55.05 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத்திற்கான டிக்கெட்டுகள் சரியாக விற்பனை ஆகாததால் படம் வெளியான முதல் வாரத்திலேயே திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் கங்கனா ரணாவத்தின் நடிப்பில் வெளியான ‘தாகத்’ திரைப்படம் வெளியான 8-வது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!