மற்ற படங்களால் விஜய் பட வாய்ப்பை வேண்டாம் என்ற சமந்தா.. வாய்ப்பை நழுவவிட்டு நடிகை

விஜய் – சமந்தா
நடிகர் விஜய் – நடிகை சமந்தா இணைந்து இதுவரை மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.
முதலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில் வெளியான தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு திரைப்படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் தளபதி 67 படத்திலும் சமந்தா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

வாய்ப்பை நழுவவிட்டு நடிகை
ஆனால், சமந்தா இப்படத்தில் நடிக்கவில்லை என்று அதன்பின் தெரியவந்தது. இதற்க்கு சமந்தாவின் கால்ஷீட் தான் காரணமாம்.

மற்ற படங்களில் பிசியாக இருந்து வரும் நடிகை சமந்தா, விஜய்யுடன் தளபதி 67 படத்தில் நடிக்க நிராகரித்ததாக கூறப்படுகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!