டைட்டானிக் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு by priya | @ | June 10, 2022 8:20 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கலையரசன். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘குதிரைவால்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினர். இதைத் தொடர்ந்து இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டைட்டானிக். கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படதில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.‘திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பாக சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மே 6-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்பு வந்த நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 24-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…