அட்லீ-ஷாருக்கான் படத்தின் புதிய தகவல்

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லீ, இயக்கி வரும் ஹாலிவுட் படத்தின் தலைப்பு குறித்த் தகவல் வெளியாகியுள்ளது.

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார்.


தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லீ இயக்கிவரும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘ஜவான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் டைட்டிலுடன் கூடிய ஒரு டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!