சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களை கடுமையாக விமர்சித்த அமீர் !

இயக்குநர் அமீர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர், இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் சிறந்த விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெறுகிறது.

இதனிடையே தற்போது இயக்குநர் அமீர் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் குறித்து தனது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது : ” ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் பங்கேற்பதில் நடிகர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நடிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிகொள்ள கூடிய விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரசிகர்கள் நடிகர்களை திரையரங்குகளில் மட்டும் பார்த்து சந்தோஷப்பட வேண்டும், அவர்களை வீட்டிற்கு சுமந்து செல்வது நல்லதல்ல” என பேசியுள்ளார் அமீர். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!