
பிரபாஸ் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹா மற்றும் ராதே ஷ்யாம் இரு திரைப்படங்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், சலார் படம் வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அதிர்ச்சியளிக்கும் கடிதம்
இந்நிலையில் சமீபகாலமாக சலார் படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாகாததால் விரைவில் அப்டேட் வெளியிட வேண்டும் இல்லை என்றால், தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், அந்த கடிதத்தில் அந்த ரசிகர் கடைசி வரிகளை ரத்தத்தில் எழுதியதுபோன்று சிவப்பு நிறத்தில் எழுதியுள்ளார்.
அந்த ரசிகரின் இந்த கடிதம் தற்போது டோலிவுட் திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!