
இந்நிலையில் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்த கன்னட சீரியல் நடிகை சேத்னா ராஜ் மரணம் அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு 21 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரின் அனுமதி இல்லாமலேயே அவர் பெங்களூரில் இந்த சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார். அவர் சர்ஜரியில் பலியானதால் பெற்றோர் தற்போது சர்ஜரி செய்தவர்களின் கவனக்குறைவு தான் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் புகார் கூறி இருக்கின்றனர்.
மேலும் சரியான உபகரணங்கள் இல்லாமல் இந்த சர்ஜரி செய்திருக்கிறார்கள் என தெரிவித்து உள்ளனர்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவர் நுரையீரலில் தண்ணீர் அதிகம் சேர்ந்ததால் தான் மரணமடைந்தார் என தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி மருத்துவமனை மீது சட்டப்படி வழக்கு தொடரப்போவதாக நடிகையின் அப்பா தெரிவித்து உள்ளார்.
- இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!