அவர் அப்படியானவர் அல்ல எனக்கு தெரியும்..!! கலைஞானம் அதிர்ச்சி தகவல்..!!


கமல் மேல் மட்டத்தினரை மட்டுமே புரிந்து கொள்வார் என்றும் ஆனால் ரஜினி மேல் மட்டத்தினர், கீழ் மட்டத்தினர், நடு மட்டத்தினர் என அனைத்து தரப்பினரையும் புரிந்து கொள்வார் என்று தயாரிப்பாளர் கலைஞானம் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் போல கமல் ஹாசனும் அரசியலில் குதிக்க போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் நடிப்பில் இரு நட்சத்திரங்கள் என்றாலும் அரசியலில் எப்படி ஜொலிப்பார்கள் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உண்டு.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதேபோல் 31-ஆம் தேதி ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும் நிலையில் அவர் தனிக் கட்சி தொடங்குவாரா இல்லை யாருடனாவது கூட்டணி அமைப்பாரா என்ற கேள்விகள் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.


தனி கட்சிதான்
கூட்டணி கிடையாது

இதுகுறித்து சன் நியூஸ் தொலைகாட்சி சேனலுக்கு கலைஞானம் அளித்த பேட்டியில் கூறுகையில், ரஜினி தனிக் கட்சித்தான் தொடங்குவார். யாருடனும் கூட்டணி கிடையாது. நடிகர்களிடம் நிச்சயம் ஆதரவு கோருவார். என்னை பொருத்தவரை தற்போதுள்ள நடிகர்களில் யாரும் உடனடியாக அரசியலில் இறங்குபவர்கள் யாரும் இல்லை. செயல்படுத்துவதில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நெருக்கம் உண்டு.

கமல் மேல்மட்டம்
ரஜினி அனைத்து மட்டங்களும்…

நடிகர் கமல் 2, 3 மாதங்களாகத்தான் அரசியலுக்கு வருவது குறித்து பேசி வருகிறார். ஆனால் ரஜினியோ 10-15 ஆண்டுகளாகவே அரசியல் குறித்து பேசி வருகிறார், மேலும் மற்றவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார். கமல் மேல்மட்டத்தில் இருப்பவர்களை மட்டுமே புரிந்து கொள்வார். ரஜினி மேல் மட்டம், கீழ் மட்டம், நடுமட்டத்தில் உள்ளவர்கள் என அனைவரையும் புரிந்து கொள்வார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நம்பிக்கை இல்லை
வாழ்வு கொடுத்த தமிழக மக்கள்


கமலுக்கு கீழ் மட்டத்தில் செல்வாக்கு இருக்குமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. மாற்றத்தை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும். எதிர்ப்பு இல்லாட்டி எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது. வாழ்வு கொடுத்த மக்களுக்கு பாடுபடுவதுதான் மனிதன். எம்ஜிஆர் மலையாளியாக இருந்தாலும் அவருக்கு வாழ்வு கொடுத்த மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். அதுபோல் ரஜினியும் அவருக்கு வாழ்வு கொடுத்த தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

தனி பெரும் செல்வந்தர்
பின் வாங்க கூடாது

அரசியலுக்கு வராமல் தனி பெரும் செல்வந்தராகவே ரஜினி இருந்தால் எத்தனை பேருக்கு உதவி செய்ய முடியும். எனவே அரசியல் எனும் பொக்கிஷத்தை கொண்டுதான் உண்மையில் பயனாளிகளுக்கு உதவ முடியும். முன் வைத்த காலை பின் வைக்காதே. அப்படி பின் வைத்தால் அது இழுக்கு என்பதுதான் ரஜினிக்கு எனது அறிவுரை என்று கலைஞானம் தெரிவித்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!