ஸ்ரீதேவிக்கு அடிக்கடி மயங்கி விழும் பிரச்சனை இருந்துச்சாம்

ஸ்ரீதேவி குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையால் அடிக்கடி மயங்கி விழுந்ததாக அவரை பற்றி புத்தகம் எழுதிய சத்யார்த் நாயக் தெரிவித்துள்ளார்.

நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய்க்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். உயரமான ஸ்ரீதேவி எப்படி குளியல் தொட்டியில் மூழ்க முடியும், அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறப்பட்டது.

ஸ்ரீதேவி மது போதையில் குளியல் தொட்டி நீரில் மூழ்கியதாகவும் கூறப்பட்டது. என்னதான் போதை என்றாலும் சின்ன தொட்டியில் எப்படி மூழ்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் ஸ்ரீதேவியை பற்றி Sridevi:The Eternal Goddess என்கிற புத்தகத்தை எழுதிய சத்யார்த் நாயக் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

பங்கஜ் பரஷெர்(ஸ்ரீதேவியை வைத்து சால்பாஸ் படத்தை இயக்கியவர்) மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் ஸ்ரீதேவிக்கு குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை இருந்ததாக என்னிடம் கூறினார்கள். தங்கள் படங்களில் வேலை செய்தபோது ஸ்ரீதேவி பாத்ரூமில் மயங்கியதாக இருவருமே தெரிவித்தார்கள்.

பின்னர் நான் ஸ்ரீதேவியின் உறவினரான நடிகை மகேஸ்வரியை சந்தித்து பேசினேன். ஸ்ரீதேவி பாத்ரூமில் மயங்கி விழுந்து, முகத்தில் ரத்தம் ஒழுகியபடி கிடந்ததை தான் பார்த்தாக மகேஸ்வரி கூறினார்.

நடந்து கொண்டிருக்கும்போதே ஸ்ரீதேவி திடீர் என்று மயங்கிவிடுவார் என போனி கபூரும் தெரிவித்தார். ஸ்ரீதவிக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருந்துள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!