கமல் – பா.ரஞ்சித் இணையும் திரைப்படம்! இப்படி தான் இருக்குமாம்..

உலகநாயகன் கமல் தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.

அதன்படி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில் கமல் பா.ரஞ்சித் இணையவுள்ள திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் உண்மையான கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இதற்கு முன் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படமும் உண்மையான சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.