கவர்ச்சி நடிகையின் தமிழ் படத்தின் பெயர் என்ன தெரியுமா..? அட நம்புங்கப்பா..!!


சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படத்தின் தலைப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தென்இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபு சார்ந்த படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாக உள்ள இந்த படத்தை இயக்குநர் வடிவுடையான் இயக்க உள்ளார்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான பெயரின் கடைசி எழுத்தான “வி” என்னும் எழுத்தை மட்டும் வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படக்குழுவினர் இன்று படத்தின் பெயரை சன்னி லியோனை வைத்தே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

“வீரமாதேவி” என்னும் இந்த படத்தின் தலைப்பை சன்னி லியோன் தமிழி மொழியிலேயே பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!