கர்ணன் படம் குறித்து பதிவை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

மேலும் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி இப்படம் வெளியான முதல் நாளிலே ரூ.10.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, இதனால் இப்படம் நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் வெளியான முதல் நாளிலே அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது.

கர்ணன் திரைப்படம் குறித்து தினம்தோறும் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் இப்படத்தை புகழ்ந்து இணையதளத்தில் பதிவிட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது இப்படத்தின் ஹீரோ தனுஷ் கர்ணன் திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் “நன்றி, கர்ணன்” என கர்ணன் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!