நடிகை ஜோதிகாவுக்கு பதிலாக அந்த படத்தில் பாகமதி நடிகையா..? வியப்பில் ரசிகர்கள்..!!


பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடித்த படம் தான் நாச்சியார். இந்த படத்தில் ஜோதிகா காவல் அதிகாரியாக நடித்திருப்பார். ஜோதிகாவை வித்யாசமான கோணத்தில் காட்டியிருப்பார் பாலா. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷின் தோற்றத்தில் கூட பல மாற்றங்களை செய்திருப்பார் பாலா.

இந்த படம் தமிழகத்தில் மிகவும் வரவேற்பு பெற்ற படமாக அமைந்துள்ளது.


இந்த படத்தின் கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் இருப்பதால் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து அதில் அனுஷ்காவை கதாநாயகியாக வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

அனுஷ்கா ஒப்புக்கொண்டால் இந்த படம் தெலுங்கில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால் அனுஷ்கா சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரம் அனுஷ்காவின் தோற்றத்திற்கு மிகவும் கச்சிதமாக இருக்கும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி