தளபதியின் அடுத்த படத்தை இயக்க போவது யார் தெரியுமா..?


தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு அட்லீ பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டார். அவரின் கால்ஷிட்டை வாங்க பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ பேசுகையில் ‘கண்டிப்பாக மெர்சல் வெற்றிக்கு முதலில் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், இதெல்லாம் அவர்கள் கொடுத்த ஆதரவு தான்.


மேலும், தெறியை விட மெர்சல் பெரிய வெற்றி, என் அடுத்தப்படம் இதோடு பெரிதாக இருக்கும், அதில் விஜய் அண்ணனும் இருப்பார்’ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் அட்லீயின் அடுத்தப்படமும் விஜய்யுடன் தான் என்று தெரிய வந்துள்ளது. இதுவும் மெர்சலை போன்று சர்ச்சைக்குரிய கதை அம்சத்தை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!