அடுத்த ஜென்மத்திலும் இவரே என் மனைவியாக வேண்டும்..!! கணவர் உருக்கம்..!!


நடிகை ஜெனிலியாவின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ரித்தேஷ் தேஷ்முக் தனது 39-வது பிறந்தாளை சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில், தனது கணவருக்கு ஜெனிலியா அளித்துள்ள பரிசும்,அந்த பரிசை ஏற்றுகொண்ட ரித்தேஷ் தேஷ்முக்கின் அன்பு வார்த்தைகளும் தான் இப்போது பாலிவுட்டில் வைரல் நியூஸ்.

58 லட்ச ரூபாய் மதிப்புள்ள டெஸ்லா X ரக காரினை தனது கணவருக்கு பரிசாக கொடுத்து அதிரவைத்துள்ளார் ஜெனிலியா.


இதனை ஏற்றுகொண்ட ரித்தேஷ் ” 40 வயது ஆனவர்களை கூட 20 வயது போல உணரவைக்கும் யுக்தி என் மனைவிக்கு தெரியும். அடுத்த ஜென்மத்திலும் ஜெனிலியாவே எனக்கு மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அன்பு மொழிகளை பொழிந்துள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த பாலிவுட் இயக்குனர் ஃபரா கான் எனக்கு ஜெனிலியா போன்ற ஒருவர்தான் மனைவியாக வேண்டும் என ஏக்கத்துடன் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!