என்னப்பா.. சொல்றீங்க இவங்களுக்கு திருமணமா..? ஷாக்கான நடிகை..!!!


விராத் கோஹ்லி திருமணம் குறித்து நாடே அறிந்து கொண்டுள்ள நிலையில் அனுஷ்கா சர்மாவுடன் அடுத்த படத்தில் நடிக்கும் கத்ரினா கைஃப்புக்கு தெரியாதது அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த ஓராண்டாக கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் ,பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிந்தனர்.

எனினும் இவர்கள் தங்களது காதலிப்பதை மறுத்து வந்தனர். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் உள்ளிட்ட சில வதந்திகளுக்கு மத்தியில் இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.


இந்நிலையில் விராத் கோஹ்லி – அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த வாரம் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இருவரும் தேனிலவுக்காக ஐரோப்பா நாட்டில் உள்ள நிலையில் மும்பையிலும், டெல்லியிலும் இரு திருமண வரவேற்புகளை நடத்தவுள்ளனர். இதைத் தொடர்ந்து புத்தாண்டை தென்னாப்பிரிக்காவில் கொண்டாடுகின்றனர்.

இவர்களது திருமணம், விராத் கோஹ்லியின் மோதிரம் பரிசு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இவர்களது திருமணம் குறித்து ஒரு நடிகை தனக்கு தெரியாது என்கிறார்.


அனுஷ்கா சர்மாவுடன் ஜப் தக் ஹை ஜான் என்ற படத்தில் கத்ரினா கைஃப் நடிக்கவுள்ளனர். ஆனால் அவருக்கு இவர்களது திருமணம் குறித்தே தெரியாது என்ற பகீர் தகவலை தெரிவித்துள்ளார். நாடே தெரிந்து கொண்டுள்ள நிலையில் தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

விருஷ்கா திருமணம் குறித்து லேட்டாக தெரிந்து கொண்ட கத்ரினா கூறுகையில், எனக்கு அவர்களது திருமணம் குறித்து தெரியாது. எனினும் அவர்களது திருமணம் அழகாக நடந்தேறியிருக்கும் என்று நம்புகிறேன்.திருமண புகைப்படங்களையும், திருமண வீடியோக்களையும் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. நிறைய அன்புகளுடன் நன்றாக வாழ வாழ்த்துகிறேன் என்று கத்ரினா கைஃப் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!