ரீஎண்ட்ரி கொடுக்கும் மோகன்.. தளபதி விஜய் பற்றி என்ன கூறியுள்ளார் பாருங்க

70ஸில் இருந்து 90ஸ் வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் மோகன்.

இவர் 1999ஆம் ஆண்டு வெளிவந்த அன்புள்ள காதலுக்கு என்ற மூலம் தமிழ் திரையுலகில் இருந்து சிறிதாக ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் பேசும் பொழுது “என் திரையுலக பயணத்தில் நான் என்னுடைய Costume Designer-ருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுருக்கிறேன். என் படங்களில் மிகவும் என் ரசிகர்களை கவர்ந்தது என்னுடைய உடைகள் தான். என்னுடைய Costume Designer தான் தளபதி விஜய் அவர்களுக்கு Costume Designer. ஏனென்றால் தளபதி விஜய் என் படங்களை பார்த்துவிட்டு எனது Costume Designer-ரை கேட்டார்”.

மேலும் “நான் விஜய்யை ஒரு நல்ல படம் நடித்து விட்டு தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறன். மாதத்திற்கு ஓரிரு பட வாய்ப்புகள் என்னை தேடி வருகிறது. ஆனால் நல்ல படத்திற்காக நான் காத்திருக்கிறேன். அந்த வகையில் தற்போது ஒரு நல்ல படம் என்னை தேடி வந்துள்ளது நிச்சயமாக 2020ஆம் ஆண்டு என்னுடைய ஒரு நல்ல படம் உங்களை தேடி வரும்” என்றும் கூறினார்.

இப்படம் நிச்சயமாக மோகன் அவர்களுக்கு மிக பெரிய ரீஎண்ட்ரியாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!