வாட்ச் மேனுடன் தொடர்பு வைத்ததை அவர் பார்த்தாரா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!!


லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர், டிவி தொகுப்பாளர், பேஷன் டிசைனர் என்று பல துறைகளில் கலக்குபவர். பல விஷயங்களில் இவர் ஜாம்பவானாக இருந்தாலும் இவருக்கு தனி அங்கீகாரம் வாங்கிக்கொடுத்து “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி. பெண்கள் மத்தியில் இவருக்கு தனி செல்வாக்கை ஏற்படுத்தி கொடுத்தது. எனினும் இந்நிககிழ்ச்சியால் பல பிரச்சனைக்களுக்கும், கிண்டல்களுக்கும் இவர் ஆளாகியுள்ளார் என்பது நாம் அறிந்ததே.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சென்ற வாரம் ரிலீசான படம் அருவி. இப்படத்தின் ஒரு பகுதி இந்த இந்நிகழ்ச்சியின் மறுப்பக்கத்தை காட்டுவது போல் எடுத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி அனைத்தும் TRP ஏறவேண்டும் என்பதற்க்காக எடுக்கப்படும் ஒன்று. இதில் மக்களை வேண்டுமென்றே அழ வைக்கின்றனர், அடிப்பதற்கும் தூண்டுகின்றனர். தொகுப்பாளர் பேசுவது எல்லாம் இயக்குனர் சொல்லி கொடுப்பது தான் என்பது போன்ற காட்சிகள் நிறைய உள்ளது அருவி படத்தில். தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரை “பீ டிவி” என்று நிகழ்ச்சி பெயரை ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்று மட்டும் மாற்றிவிட்டனர்.


இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் சற்று மன வருத்தத்தில் உள்ளனர். அவர் ட்விட்டர் வாயிலாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

தன்னுடைய ஆரம்ப டீவீட்டைகளில், மிகவும் தன்மையாகவும், பொறுமையாகவுமே இந்நிகழ்வு பற்றி கேட்பவர்களுக்கு பதில் கூறினார்.

‘இந்தப்படம் பற்றி சில மாதங்களுக்கு முன் சென்சார் ஆன பொழுதே கேள்விப்பட்டேன். இது சிறந்த படம், நீங்கள் எந்த விதத்திலும் ரியாக்ட் ஆகாதீர்கள் என்றனர். எனினும் இயக்குனர் சிறந்த படத்தையே கொடுத்துள்ளார். பெண்மையை பெருமை படுத்தும் விதமாக படம் எடுத்துள்ளார். ஆனாலும் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் நிகழ்ச்சியை கொச்சை படுத்தியுள்ளார்.’ என்றார்.


மேலும் ‘அது பரவாயில்லை. நல்ல படம் தானே எடுத்துள்ளார். இவ்வாறு தவறாக சித்தரிப்பதால், என் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மனம் மாற வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ச்சியை புறக்கணித்தால், நான் சரியாக வேலை பார்க்க வில்லை என்று அர்த்தம்’ என்றும் பதில் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தனக்கு சரி என தோன்றும் கருத்துக்களை மறைக்காமல் சொல்லக்கூடியவர் ஆகிற்றே லட்சுமி ராமகிருஷ்ணன். சிறுது நேரம் கழித்து மீண்டும் ஒரு ட்வீட் போட்டார்.

“தமிழகத்தின் இளம் படைப்பாளிகள் மற்றவர்களை கேலி, கிண்டல் செய்தும்,அடுத்தவர்களை கலாய்த்து, பிறரை சிறுமை படுத்தி படம் எடுக்கின்றனர் . ஆனால் பாலிவுட் சினிமாவில் நிஜ வாழ்க்கை ஹீரோக்களை வைத்து படம் எடுக்கின்றார்.அவருடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி ” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருந்த சூழலில் ஒரு பக்கம் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வலுக்கும் ஆதரவு, மறுபக்கம் அவரை பற்றி தரக்குறைவாக பேசுவது என்று ட்விட்டரில் இந்த அருவி படமும், சொல்வதெல்லாம் நிகழ்ச்சியும் விவாதப்பொருள் ஆனது.


படம், டிவி நிகழ்ச்சி என்பதை தாண்டி தற்பொழுது இயக்குனர் அருண் பிரபு, தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் என்று தனி நபர்களின் விவகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது இப்பிரச்சினை.

இவர் தன் ஆதரவாளர்களுடன் விவாதித்துது பல டீவீட்டுக்களை போட்டு வருகிறார் .

“அவர் வேண்டும் என்றால் கூறலாம், தான் ரிசெர்ச் செய்தேன் என்று. நான் புடவை முந்தானையை தூக்கி எரிவதை அவர் பார்த்தாரா ? அல்லது வாட்ச் மேனுடன் தொடர்பு வைத்தேன் என்று பார்த்தாரா ? அவர் வீட்டில் தான் இது போன்றவர்களை அவர் பார்த்திருப்பார்.” என்று நேரடியாகவே பதில் கூறியுள்ளார்.

“விவாதம் மற்றும் விமர்சனம் செய்வது சரி. எந்த ஒரு விஷயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும், அதை ஆராயலாம், அலசலாம். எனினும் தனி நபரை தாக்குவது, வரம்பு மீறுவது, ஒருவர் சங்கடப்படும் படும் படி சித்தரிப்பது கொடுமை. இவை அனைத்திற்கும் மேல் மற்றவர் படத்தை காப்பி அடிப்பது? 2011 அரபி படம் அஸ்மா ?” என்று கேள்வி கேட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!