ஆஸ்கார் விருது தேர்வுப்பட்டியலில் மெகா ஹிட் திரைப்படம்..!! வியப்பில் ரசிகர்கள்..!!


மலையாள சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மெகா ஹிட்டித்த திரைப்படம் ‘புலி முருகன்’.

இயக்குனர், வைசாக் இயக்கியிருந்த இந்தப்படம் ரசிகர்களின் அமோகமான ஆதரவை பெற்று கோடி கணக்கில் வசூலை அள்ளியது. இந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ‘வேட்டையாடு விளையாடு’ புகழ் நடிகை கமலினி முகர்ஜி நடித்திருந்தார்.


இப்படத்தில் இடம்பெற்ற ‘காடனையும் கால்சிலம்பே’ மற்றும் ‘மானதே மாரிகுரும்பே’ ஆகிய இரண்டு பாடல்களும், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த பாடலுக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடலுக்கான பட்டியலில் இந்தியாவில் இருந்து தேர்வான முதல் படம் ‘புலி முருகன்’ என்பது குறிப்பிடத்தக்கது. 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி லாஸ் ஏஞ்செல்ஸில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!