முதல் ரேஸில் தோற்ற அஜித்! இந்தமுறையும் வெல்வாரா ராஜமௌலி..

அடுத்த வருடம் ஜனவரி மாதம் இரண்டு திரையுலகிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது.

அதன்படி அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படமும், ராஜமௌலி இயக்கத்தில் ராம சரண் மற்றும் ஜூனியர் NTR இணைந்து நடித்துள்ள RRR படமும் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் வெளியாகவுள்ளது.

பாகுபலி படத்திற்கு ராஜமௌலியின் இயக்கத்தில் RRR திரைப்படம் வெளியாகவுள்ளதால் இப்படத்திற்கு கிடைக்கவுள்ள வரவேற்பு குறித்து அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக அவரின் ரசிகர்கள் அப்டேட் கேட்காத இடமே இல்லை.

இதனிடையே இதற்கு முன் இதேபோல் அஜித் மற்றும் ராஜமௌலியின் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது.

ஆம், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஜித்தின் பில்லா 2 மற்றும் ராஜமௌலி நான் ஈ திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் பில்லா 2 படு தோல்வி அடைந்தது, நான் ஈ ராஜமௌலியின் முதல் அலையை திரையுலகில் உருவாக்கியது.

எனவே தற்போது ஒரே சமயத்தில் வலிமை மற்றும் RRR திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், இந்த முறை யாரின் திரைப்படம் வெற்றியடையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!