அம்மாடியோவ்… மறுபடியும் தல தளபதி கூட்டணி..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!


நடிகர் அஜித் சிறுத்தை சிவா இணையவுள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது. தீபாவளி ரிலீஸை முக்கிய அம்சமாக வைத்து படத்தின் தயாரிப்பு தரப்பு ஃபுல் ஸ்பீடாக உள்ளது. படத்தின் இறுதிகட்ட கதை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், படத்தின் கதாநாயாகி இவர்தான் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் படத்தின் நாயகி யார் என்ற அறிவிப்பை வெளியிடமால் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது படக்குழு.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மற்றொரு பக்கம் நடிகர் விஜய் முருகதாஸ் இயக்கவுள்ள “தளபதி 62” திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பும் ஜனவரி மாதம் தொடங்கும் எனவும், விஸ்வாசம் போலவே தீபாவளி ரிலீசை முக்கிய அம்சமாக வைத்து தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.


அதே போல, தளபதி62 படத்தின் கதாநாயகி யார் என்றும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கதை விவாதம் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் விஸ்வாசம் மற்றும் தளபதி62 படங்களின் அப்டேட்கள் சரவெடியாய் வெடிக்கும் என கூறுகிறார்கள் கோடம்பாக்க வாசிகள்.

சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியாக, படத்தின் அறிவிப்புகளை சஸ்பென்சாக வைத்திருக்கும் தல மற்றும் தளபதியின் அறிவிப்பு என்ன..? 2018 தீபாவளி ரிலீஸ் எது..? என்ற கேள்விகள் ஆயிரம் வாலா பட்டாசாக ரசிகர்கள் மனதில் இப்போதே வெடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதே நிதர்சனம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!