அஜித் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே.. வெளிவந்த சூப்பர் தகவல்

பூஜா ஹெக்டே
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் படம் தமிழில் வெளிவந்தது.

இதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரனுடன் இணைந்து ஆர்ச்சர்யா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுடனும் கைகோர்த்துள்ளார் பூஜா.

அஜித் பட ரீமேக்கில் பூஜா
இதில் ஒன்று கபி ஈத் கபி தீவாளி எனும் படம். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் 2014ம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!